கடந்த காலங்களில் எச்ஐவி கிருமி அல்லது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஈமச் சடங்குகளை இறந்த 24 மணி நேரத்தில் முடித்துவிட வேண்டும். அவர்களுக்கு முறையாக இறுதிச் சடங்குகளை நடத்துவதற்குக்கூட குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் இந்த விதி முறைகளுக்கு எதிராக நான்கு ஆண்டுகளாகப் போராடிவந்தனர். இதற்கு 2000ஆம் ஆண்டில் பலன் கிடைத்தது. அப்போது சுகா தார அமைச்சு, இறுதிச் சடங்கு களைக் குடும்பத்தினர் மூன்று நாட்களுக்குள் நடத்த அனுமதி யளித்தது.
சமூகத்திற்குப் பலன் அளிக் கும் வகையில் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்த பிரச்சினைகளில் இது வும் ஒன்று. இதுபோல 37 மாற்றங் களின் வரலாற்றுப் பாதைகள் தற் போது புத்தகமாக வடிக்கப்பட்டுள் ளன. இந்நூல் சிங்கப்பூர் எழுத் தாளர் விழாவின் ஓர் அங்கமாக நேற்று வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ள 344 பக்கங் களைக் கொண்ட இத்தகைய ஆங்கில நூல் பல்வேறு பிரச்சினை களுக்கு இடையே சமூகம் நடை போட்டு வந்த பாதையை விவரிக் கிறது. விலங்கு நலன், மூப்படைதல், கலாசாரம், நம்பிக்கை, சுகாதாரம், சுற்றுச்சூழல், பாரம்பரியம், மனித உரிமை, இலக்கியம், குடியேறிய ஊழியர்கள், பாலியல் தொழி லாளர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் பலதரப்பட்ட மாற்றங்கள் இதில் பட்டியலிடப் பட்டுள்ளன.
புதிய நூலுடன் கான்ஸ்டன்ஸ் சிங்கம், மார்கரட் தாமஸ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

