அறநிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத் தரங்கள் வலுப்படுத்தப்படும்

அறநிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத் தரங்கள் வலுப்படுத்தப்படும்

1 mins read

சிங்கப்பூரில் உள்ள அறநிறுவனங்கள், 80க்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகத் தரங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அது தொடர்பான இரண்டு மசோதாக்களை கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அறநிறுவன ஊழியர் அல்லது வாரிய உறுப்பினருக்கான அதிகபட்ச பணியிடைநீக்க காலத்தை ஓராண்டில் இருந்து இரு ஆண்டுகளாக உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விசாரணைகளுக்கும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளுக்கும் அறநிறுவன ஆணையர் அலுவலகத்திற்குக் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும். கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்புத் தணிக்கைகளை நடத்தவும் செயலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க மசோதா பரிந்துரைக்கிறது.