புதிய கடன் வரம்பு: மசோதா தாக்கல்

புதிய கடன் வரம்பு: மசோதா தாக்கல்

1 mins read

உரிமம் பெற்ற கடன்கொடுப்போர் ஒவ்வொருவரும் கடன் கொடுப்பதில் ஒரு வரம்பைக் கடைப்பிடித்து வருகின்றனர். அப்படி ஒருவரிடம் கடன் வாங்கியவர், மேலும் கடன் வாங்கும் நோக்கில் உரிமம் பெற்ற வேறு கடன் கொடுப்போரையும் இப்போது அணுக முடியும். இந்த நடைமுறையை மாற்றி, உரிமம் பெற்று கடன் கொடுக்கும் எல்லாரிடமும் ஒருவர் வாங்கும் மொத்த கடன் தொகைக்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கும் விதமாக கடன் கொடுப்போர் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய நாடாளு மன்றத்தில் நேற்று ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதிய விதிகளின்படி, ஆண்டுக்கு $20,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் ஒருவர், கடன்கொடுப்போர் எல்லாரிடமும் சேர்த்து அதிகபட்சமாக $3,000 மட்டுமே கடன் வாங்க முடியும். மற்றவர்களுக்கு இந்த உச்ச வரம்பு அவர்களின் ஆறு மாத ஊதியமாக இருக்கும்.