சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தின் முதல் வகுப்பு பயணச்சீட்டை இலவசமாகப் பெறுவது குறித்து வாட்ஸ்அப் செயலியில் மோசடி இணைப்பு அனுப்பி வைக்கப்பட்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பயணச்சீட்டுகள் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகக் கூறி இணைப்புகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் வலம் வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றைக் கொண்டு பொதுமக்களிடமிருந்து அவர்களது தனிப்பட்ட விவரங்களைப் பெற மோசடிக்காரர்கள் முயற்சி செய்வதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
எஸ்ஐஏ முதல் வகுப்பு பயணச்சீட்டு மோசடி குறித்து எச்சரிக்கை
1 mins read

