ரயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக நகரத்தை நோக்கிச் செல்லும் வடக்கு=தெற்கு ரயில் பாதையில் நேற்று காலை சேவைத் தாமதம் ஏற்பட்டது. பழுது ஏற்பட்ட ரயில் பீஷான், அங் மோ கியோ எம்ஆர்டி நிலையங்களின் தளமேடை அருகில் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. தளமேடையைக் கடந்து சென்ற பிறகே ரயில் நின்றதாகத் தெரிவிக்கப்பட்டது. காத்துக்கொண்டிருந்த பயணிகளை ஏற்றிக்கொள்ள ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டது. தென் திசை நோக்கிச் சென்ற ரயில்கள் இயோ சூ காங் நிலையத்திலிருந்து நியூட்டன் நிலையம் வரை ஒவ்வொரு நிலையத்திலும் ஐந்து நிமிடங்களுக்கு நின்றதாகப் பயணிகள் சிலர் தெரிவித்தனர்.
ரயிலில் ஏற்பட்ட பழுதால் வடக்கு-தெற்கு பாதையில் சேவைத் தாமதம்
1 mins read

