பிரதமர் லீ சியன் லூங், 25வது ஆசிய - பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று வியட்னாமின் டானாங் நகருக்குப் புறப்பட்டுள்ளார். வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தி, நாடுகளுக்கிடையே பொருளியல் வளர்ச்சியை நிலைத்திருக்கக்கூடியதாக உருவாக்க ஏபெக் தலைவர்கள் விவாதிப்பார்கள். பிரதமர் லீ, தலைவர்கள் கூட்டத்துக்கு இடையே இதர ஏபெக் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவார். பிரதமர் லீயுடன் அவரது துணைவியார், வெளியுறவு, வர்த்தக தொழில் அமைச்சுகளின் அதிகாரிகள் ஆகியோர் செல்கின்றனர். பிரதமர் லீ நாடு திரும்பும்வரை, துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.
ஆசிய-பசிபிக் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் லீ பங்கேற்பு
1 mins read

