சமூக ஊடகங்களில் வெளிவரும் பொய்யான செய்திகளைத் தனது பங்காளிகளுடன் இணைந்து செம்மையான முறையில் ஃபேஸ்புக் கையாண்டு வருவதை பிரதமர் லீ சியன் லூங் பாராட்டியுள்ளார். அமெரிக்க நிறுவனமான 'ஃபேஸ் புக்'கின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க்கை நேற்று முன் தினம் சந்தித்த பின் பிரதமர் லீ அவ்வாறு கூறினார். "ஃபேஸ்புக்கின் நீண்ட நாள் பயனீட்டாளரான நான், ஃபேஸ்புக் கின் தலைமை செயல் அதிகாரியை நேற்று சந்தித்ததில் மகிழ்ச்சிய டைகிறேன்," என்று கூறிய திரு லீ, சமூகத் தளங்களில் பொய் செய்திகள் பரவி வருவது பற்றி இருவரும் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான தகவல்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு புதிய 'பொத்தான்' ஒன்றை சென்ற மாதம் ஃபேஸ்புக் அறிமுகப்படுத் தியது. வியட்னாமில் நடைபெறும் ஏபெக் கூட்டத்தில் திருவாட்டி ஷெரில் கலந்துகொள்கிறார். அதற்கு முன்பாக, அவர் சிங்கப் பூருக்கு வருகையளித்தார். படம்: பிரதமர் லீ ஃபேஸ்புக்
ஷெரில் சாண்ட்பர்க்-=-பிரதமர் லீ சந்திப்பு
1 mins read
-

