பீஷானில் கத்தி, போதைப்பொருள்

பீஷானில் கத்தி, போதைப்பொருள்

1 mins read

பீஷான் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே சந்தேகப்படும் படியாக ஆடவர் ஒருவர் நடந்துகொண்டார். பேனாக் கத்தியும் போதைப்பொருளும் வைத்திருந்ததன் சந்தேகத் தின் பேரில் அந்த 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். 200 பீஷான் ரோட்டில் பிற்பகல் 2.08 மணிக்கு காவல் பணியில் இருக்கும்போது இந்த ஆடவரின் நடவடிக்கைகள் சந்தேகிக்கும்படியாக போலிசுக்குத் தென்பட்டது. அவரை சோதனை செய்ததில் பேனாக் கத்தியும் போதைப்பொருள் என நம்பக்கூடிய பொருட்களும் இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் போலிசார் தெரிவித்தனர்.

கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்த குற்றத்திற் காகவும் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டார். கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பது பொத்தானை அழுத்தியவுடன் தானாகவே திறக்கக்கூடிய பேனாக் கத்தி, பிளேட், ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் கைமுட்டிக் காப்பு, வாள், வெட்டுக்கத்தி, போன்றவையாகும். போலிஸ் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.