ரகசிய தகவல்களை செய்தியாளரிடம் அளித்த

ரகசிய தகவல்களை செய்தியாளரிடம் அளித்த

1 mins read

ரகசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். வீவக-வின் மறுவிற்பனை நட வடிக்கைகள் பிரிவில் பேட்டை நிர் வாகியாகப் பணியாற்றும் 25 வயது திரு இங் ஹான் யுவான் (படம்), 'மறுவிற்பனை பரிவர்த்த னைகளை முறைப்படுத்துதல்' எனும் தலைப்பிலான வீவக-வின் திட்டத்தின் விவரங்களைத் தன் வசம் வைத்திருந்தார். இவ்வாண்டு மே 31ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை அந்தத் திட்டம் தொடர்பான தகவல்களை திரு இங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர் ஜெனிஸ் டை ஜியா லிங்கிடம் பகிர்ந்துகொண்டார்.

இக்குற்றம் தொடர்பில் வீவக ஜூலை 27ஆம் தேதி போலிசில் புகார் அளித்தது. இந்தத் திட்டம் குறித்து அந்தச் செய்தியாளர் வீவக-விடம் சில கேள்விகளைக் கேட்டதாகவும் அது பற்றிய தகவல் எந்த வழி யிலும் வெளியிடப்படவில்லை என் பதால் கழகத்துக்கு சந்தேகம் எழுந்ததாகவும் போலிஸ் கூறியது. பின்னர் போலிஸ் நடத்திய விசாரணையில் திரு இங், குமாரி ஜெனிசுக்கு அந்தத் தகவல்களைத் தெரிவித்தது வெளிச்சமானது. ஜூலை மாதத்தில் குமாரி ஜெனிஸ், வீவக-வின் இந்த வீட மைப்புத் திட்டம் குறித்து பல்வேறு தரப்புகளை அணுகி அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டதாக போலிஸ் கூறியது.