முதுமைப் பருவத்தைப் பற்றிய இருவழித்தொடர்பு கண்காட்சி இன்று சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் பொதுமக்களுக் காகத் திறக்கப்படுகிறது. "டயலாக் வித் டைம் - எம்பி ரேஸ் ஏஜிங்" (காலத்துடன் உரை யாடல் - முதுமையை அரவணைப் போம்) என்ற தலைப்பிலான இப் புதிய நிரந்தரக் கண்காட்சியை அறிவியல் நிலையமும் சுகாதார அமைச்சும் நேற்றுத் தொடங்கி வைத்தன. கல்வி அமைச்சும் கண் காட்சிக்கு ஆதரவளிக்கிறது. முதுமைக்காலச் சவால்களை எல்லா வயதினைச் சேர்ந்த வரு கையாளர்களின் பார்வைக்கும் கொண்டு வரும் இக்கண்காட்சி, புரிந்துணர்வு, அடுத்தவரின் நிலை உணரும் மனப்பாங்கு, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளுதல் ஆகி யவற்றை ஊக்குவிப்பதாக அறி வியல் நிலையம் குறிப்பிட்டது.
கண்காட்சியின் சிறப்பம்சமாக, வருகையாளர்களை முதிய வழி காட்டிகள் ஒரு மணிநேர உலா வுக்கு அழைத்துச் செல்வார்கள். மொத்தம் 32 முதிய வழிகாட்டிகள் உள்ளனர். அவர்கள் 65 வயதுக் கும் 85 வயதுக்கும் இடைப்பட்ட வர்கள். நேற்றைய தொடக்க நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், "இக் கண்காட்சியின் மூலம், எல்லா வயதினைச் சேர்ந்த வருகையாளர்களும் முதுமைப் பருவத்தைப் புரிந்துகொண்டு மதிப்பார்கள் என நம்புகிறோம்.
வாழ்க்கையின் ஓர் அம்சம் இது. சொல்லப்போனால், முதுமையை நோக்கிய பயணம் நாம் பிறந்த நாளிலிருந்தே ஆரம்ப மாகிறது," என்று கூறினார். முதியோர் நடப்பதற்கு சிரமப்படுவதை மாணவி ஒருவர் தனது கால்களில் எடையைப் பொருத்திக்கொண்டு நடந்து உணர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

