கப்பல் விபத்து: கடைசி உடலும்

கப்பல் விபத்து: கடைசி உடலும்

1 mins read

சிங்கப்பூர் கடற்பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி JBB DE RONG 19 கப்பலும் Kartika Segara எனும் எண்ணெய் கப்பலும் மோதிக் கொண்டதில் JBB DE RONG 19 கப்பலில் இருந்த 12 பேர் கடலுக்குள் விழுந்தனர். அவர்களில் 7 பேர் மீட்கப்பட்டனர். இம்மாதம் 5ஆம் தேதிக்கு முன்பு வரை நான்கு உடல்கள் கடலுக்குள் முக்குளிப்பாளர்களால் கண்டெடுக்கப்பட்டன.

மூழ்கிய கப்பலுக்கு அடியில் இம்மாதம் 5ஆம் தேதி கடைசி உடல் கண்டெடுக்கப்பட்டது என்று கடற்துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கடலுக்கு மூழ்கிய ஐந்து உடல்களும் இப்போது கண் டெடுக்கப்பட்டு விட்டதால், நடப்பில் இருந்த தேடி மீட்கும் நடவடிக்கை நிறைவுபெறுவதாகவும் ஆணையம் கூறியது.