இரண்டு மில்லியன் வெள்ளி ஏமாற்றிய

இரண்டு மில்லியன் வெள்ளி ஏமாற்றிய

1 mins read

நான்கு பேரை ஏமாற்றி $2 மில்லியனை மோசடி செய்த 53 வயது லியோங் லாய் யீ எனும் மாது மீது இம்மாதம் 4ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அதே மாதிரியான மேலும் 84 குற்றஞ்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. முன்னாள் சொத்து முகவர் என நம்பப்படும் லியோங், நான்கு பேரிடம் $28,000க்கும் $772,733க்கும் இடையிலான தொகையை ஏமாற்றி பெற்றுள்ளார்.

இக்குற்றங்களை அவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் புரிந்துள்ளார். இதே போல் மேலும் மூன்று பெண்களையும் திருவாட்டி லியோங் ஏமாற்றியுள்ளார். திருமதி ஐரிஸ் டான் ஜிட் டியான், திருமதி டான் சியூ ஹூன், திருமதி ஜென்னி லிம் சியூ சூ ஆகியோரிடம் முறையே $771,233, $488,375, $28,000 ஏமாற்றிப் பெற்றுள்ளார். தற்சமயம் திருமதி லியோங் சாங்கி பெண்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக அவர் மீண்டும் இம்மாதம் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு பத்து ஆண்டு வரை சிறைத் தண்டனையும் ஒவ்வொரு குற்றத்துக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.