சிங்கப்பூரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சிறுவர் பூங்கா

சிங்கப்பூரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சிறுவர் பூங்கா

1 mins read

ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறுவர் பூங்கா சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பூமலையில் உள்ள ஜேக்கப் பாலஸ் சிறுவர் பூங்கா இரண்டு ஹெக்டர் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு முன்பிருந்த இரண்டு ஹெக்டரிலிருந்து நான்கு ஹெக்டராக இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று தேசிய பூங்காக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக சேவையளித்த அந்த பூங்காவை இனி 14 வயது வரை உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

சுற்றுப்புறவியல் பற்றி சிறுவர்கள் தெரிந்துகொள்ள ஜேக்கப் பாலஸ் பூங்காவில் பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் உள்ள பண்ணையில் மிளகாய் வகை ஒன்றை மாணவர்கள் சிலருடன் தேசிய வளர்ச்சி அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் நடுகிறார். நேற்றுக் காலை 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விரிவாக்கப்பட்ட பூங்காவைத் திறந்துவைத்து சிங்கப்பூர் பூமலையின் முதலாவது சிறுவர்கள் விழாவை தொடங்கிவைத்தார் அமைச்சர் லாரன்ஸ் வோங்.