'தடையற்ற வர்த்தகம் அவசியம்'

'தடையற்ற வர்த்தகம் அவசியம்'

1 mins read

விதிமுறைகள் சார்ந்த பலதரப்பு வர்த்தக முறைக்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கும் என்பதை பிரதமர் லீ சியன் லூங் உறுதிப்படுத்தி இருக்கிறார். உலகமயமாக்கல் குறித்த எண் ணம் மாறி வருவதை ஒப்புக் கொண்ட திரு லீ, தற்போதைய முறை நியாயமானதாகவும் அனை வருக்கும் பலன் அளிக்கும் வகை யிலும் இருக்கிறதா என்பது குறித்து அக்கறைகள் எழுந்துள்ள தாகவும் தெரிவித்தார். இருந்தபோதும், தொடர்ந்து வளர்ச்சி காண அதிகமான, தடை யற்ற வர்த்தகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதில் தான் உறுதி யான நம்பிக்கை கொண்டிருப்பதாக திரு லீ கூறினார். "இன்றைய உலகில், எந்த ஒரு நாடும் தன்னிறைவு அடைந்துவிட முடியாது. பரந்த உலகச் சந்தையின் ஆதரவு அவசியம்," என்று அவர் சொன்னார். வியட்னாமின் டானாங் நகரில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வருடாந்திர ஆசிய பசிபிக் பொரு ளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) உச்ச நிலைக் கூட்டத்தில் திரு லீ கலந்துகொண்டார்.