ஆசியானின் தலைமை பொறுப்பில் சிங்கப்பூர்

ஆசியானின் தலைமை பொறுப்பில் சிங்கப்பூர்

1 mins read

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா வில் 31வது ஆசியான் உச்ச நிலைக் கூட்டம் நாளை நிறைவு பெறும்போது சிங்கப்பூர், அடுத்த ஓராண்டுக்கு பத்து நாடுகள் கொண்ட இவ்வட்டார அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அப்போது பிரதமர் லீ சியன் லூங் ஏற்புரையாற்றுவார். அதில் ஆசியான் அமைப்பின் தலைவர் என்ற முறையில் சிங்கப்பூரின் முன்னுரிமைகளை அவர் பட்டியலிடுவார். அதன் பின்னர் தற்போது தலைமைப் பொறுப்பு வகிக்கும் பிலிப்பீன்சின் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தலைமைப் பொறுப்பின் அடையாளமான ஒரு சிறிய சுத்தி யலைப் பிரதமர் லீயிடம் ஒப்படைப்பார்.

ஆசியான் அமைப்பின் தலைவர் என்ற முறையில் ஆசியான் அமைப்பின் பேச்சாளராக சிங்கப் பூர் இருக்கும். அத்துடன் ஆசியான் அதிகா ரத்துவ கூட்டங்களுக்கும் பணிக் குழுக்களின் கூட்டங்களுக்கும் தலைமைப் பொறுப்பேற்று நடத்து வது, வட்டார ஒத்துழைப்பை மேம் படுத்த முன்கூட்டியே புதிய யோச னைகளையும் திட்டங்களையும் முன்வைப்பது போன்றவை சிங்கப் பூரின் பொறுப்புகளாக இருக்கும். ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சிங்கப்பூருக்கு மின்னிலக்கப் பொருளியல், மின் வர்த்தகம் ஆகியவை முன்னுரிமை களாக இருக்கும் என்று சிங்கப் பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.