சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 மற்றும் அதற்கு குறைந்த வயதுள்ள மொத்தம் 132 சிறார் காயம் அடைந்து இருக் கிறார்கள். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் 128ஆக இருந்தது. சாலைகளில் இத்தகைய தேவையற்ற விபத்துகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும். சிறாருக்குச் சாலை பாதுகாப்பு பழக்கவழக்கங்களைப் போதிக்க மேலும் பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சுக்கான மூத்த நாடாளு மன்ற செயலாளர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் கூறினார். வருடாந்திர 37வது ஷெல் போக்குவரத்து விளையாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் பேசி னார். இந்த விளையாட்டு நிகழ்ச்சி மாணவர்களின் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வைச் சோதிக் கிறது. இது ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் சாலை பாது
காப்பு சமூக பூங்காவில் நேற்று முடிவடைந்தது. சாலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி சிறாருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும் என்பதால் அவர்கள் சாலைகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர் களாக இருக்கிறார்கள் என்று இணைப் பேராசிரியர் ஃபைசால் சுட்டிக் காட்டினார். சிறார் உருவத்தில் சிறிய வர்களாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் சாலைகளில் அவர்களைத் தெளிவாகக் காண முடியாத சூழலும் இருக்கிறது என்றார் அவர். சிறாருக்குச் சாலை பாதுகாப்பு பற்றி போதிப்ப தற்காக நேற்றைய நிகழ்ச்சியில் மூன்று உயிரோவிய போதனைக் காணொளிகள் வெளியிடப்பட்டன. சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு மன்றம் நன்யாங் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரியின் பல் லூடக மின்னிலக்க ஊடகக் துறை, போக்குவரத்து போலிஸ், ஷெல் எண்ணெய் நிறுவனம் ஆகியவை இணைந்து அந்தக் காணொளிகளை உருவாக்கி இருக்கின்றன.

