உயர் ரத்த அழுத்தத்திற்கான அளவீடு 130/80 என்னும் அமெரிக்க இதயநலச் சங்கத் தின் புதிய வழிகாட்டி முறையை சிங்கப்பூர் பின்பற்றினால் கிட்டத் தட்ட மூவரில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக வகைப்படுத்தப்படும். அந்த விகி தம் தற்போதைய நான்கில் ஒரு வர் என்பதிலிருந்து உயரும். இருப்பினும் இந்த வகையில் உயர் ரத்த அழுத்தம் இருப்ப தாகப் புதிதாகக் கண்டுபிடிக்கப் படுவோர் உயர் ரத்த அழுத்தம் கட்டம்-1 என்று வகைப்படுத்தப் படுவர்.
அவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க தங்க ளது வாழ்க்கைப்பாணியில் மாற் றங்களைச் செய்தாலே போதுமா னது. அமெரிக்க இதயநலச் சங்கத் தின் பரிந்துரை திடமான ஆதா ரங்களின் அடிப்படையிலானது என்பதால் அதனை நாம் ஏற்க மறுப்பதற்குக் காரணம் இல்லை என்று தேசிய பல்கலைக்கழக இதய மைய இயக்குநர் பேராசி ரியர் டான் ஹுவே சீம் தெரி வித்தார். 1ஆம் கட்ட உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது அவர் களின் வாழ்க்கைப்பாணி மாற் றங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் பரிந் துரைத்துள்ளார்.

