ஆசியான் நாடுகள், மூன்று கிழக்காசிய நாடுகளின் தலை வர்கள் மத்தியில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (படம்) அதிக நிதி, பொருளியல் ஒருங்கி ணைப்புக்குக் குரல் கொடுத்தார். 20வது 'ஆசியான் பிளஸ் த்ரீ' நினைவு உச்சநிலைக் கூட்டம் நேற்றுக் காலை மணிலாவில் நடை பெற்றது. பத்து ஆசியான் நாடு களும் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில் தலை வர்கள் உரை நிகழ்த்தினர். பிரதமர் லீ பேசுகையில் மூன்று நாடுகளுடன் வளர்ந்து வரும் ஆசியானின் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு 2018ஆம் ஆண்டின் ஆசியான் தலைவர் என்ற முறையில் சிங்கப்பூர் சிறப் பாகப் பணியாற்றும் என்றார்.
மேலும், கிழக்காசிய சமூகம் ஒன்றை உருவாக்கும் நீண்டகால பொது இலக்கை அடையவும் அது உதவும் என்றும் திரு லீ கூறினார். ரூ.1,430 கோடி கள்ளப்பண முதலீடு அம்பலம் சசிகலா உறவினர் தொடர்பான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் நடத்திய சோதனையில் கள்ளப் பணம், வாங்கிக் குவித்த சொத்து கள் போன்றவை பற்றிய பல மர்மங்கள் அம்பலமாகி உள்ளன. சசிகலாவின் அண்ணி இளவர சியின் மகன் விவேக் ஜெயராமன், விவேக்கின் சகோதரி கிருஷ் ணப்ரியா ஆகிய இருவரும் வரு மான வரித்துறையின் பிடியில் சிக்கி உள்ளனர். விகே திவாகரன் உள்ளிட்ட சசிகலா சொந்தங்கள், கணக்கில் வராத ரூ.1,430 கோடி (சிங்கப்பூர் வெள்ளி சுமார் 297 மில்லியன்) சொத்துச் சந்தையில் முதலீடு செய்திருப்பதைக் கண்டு அதிகாரி கள் திகைத்துப்போயினர்.

