காலை நேரத்தில் பெய்த கனமழை யால் மரம் ஒன்று வேரோடு சாய்ந் ததில் கேலாங் பலதுறை மருந் தகம் அருகே நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரத் தோடு சேர்ந்து விளக்குக் கம்பமும் கீழே விழுந்துவிட்டதாக 'ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது. சிம்ஸ் அவென்யூவை நோக்கிய சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால் ஆகக் கடைசி வலத் தடத்தில் மட்டுமே கார்கள் செல்ல முடிந்தது. பெரிய வாகனங்கள் செல்ல வழி இல்லாததால் கிட்டத் தட்ட 300 மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் தேங்கி நின்றன.
"சிறிய வாகனங்களுக்கு மட் டுமே வழி இருந்ததால் நான் பயணம் செய்த பேருந்தால் நகர முடியவில்லை. பத்து நிமிடம் காத் திருந்த பின்னர் பயணிகள் பேருந் திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். சற்று தூரத்தில் உள்ள எனது வேலையிடத்துக்கு நடந்து செல் லும் நிலை ஏற்பட்டது," என்று தெரிவித்தார் பாதுகாவல் அதிகாரி யான சி.ரெங்கராஜு, 60, என்பவர். தெம்பனிஸ் விரைவுச் சாலை யிலும் நேற்று ஒரு மரம் விழுந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காலை 7.08 மணிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் தனது டுவிட்டர் பக் கத்தில் குறிப்பிட்டிருந்தது.

