பலதுறை மருந்தகத்தில் எப்போதும் மருந்துகள் பெறலாம்

பலதுறை மருந்தகத்தில் எப்போதும் மருந்துகள் பெறலாம்

2 mins read

'ஹார்ட்பீட் @ பிடோக்' சமூக மையத்தில் புதுப்பிக்கப்பட்ட பிடோக் பலதுறை மருந்தகத்தில் மருந்தாளரைப் பார்க்காமலேயே நோயாளிகள் தங்கள் மருந்து களைப் பெற்றுக்கொள்ளலாம். 'பில்பாக்ஸ்' எனப்படும் புதிய சேவையின் வழி நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்காமல் தங் கள் மருந்துகளைப் பெறமுடியும். 'சிங்ஹெல்த்'தின் கீழ் வரும் பிடோக் மலதுறை மருந்துகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'பில்பாக்ஸ்' சேவையால் மருந்துக் கூடத்தில் நோயாளிகள் மருந்துகளுக்காகக் காத்திருக்கும் நேரம் சுமார் 40% குறைந்துள்ளதாக அந்தப் பலதுறை மருந்தகத்தின் இயக்கு நர் டாக்டர் ஜூலியானா பஹாடின் நேற்று செய்தியாளர்களிடம் தெரி வித்தார். மருந்துகள் தயாரானதும் நோயாளிகளுக்கு குறுஞ்செய்தி வழி தகவல் தெரிவிக்கப்படும்.

அதன் பின்னர் நோயாளிகள் மருந்துகளை அங்கு வைக்கப் பட்டுள்ள பெட்டகத்தில் இருந்து எந்த நேரத்திலும் பெற்றுகொள்ள லாம். குறைந்த வெப்பநிலை தேவைப்படும் இன்சுலின் போன்ற மருந்துகளையும் இந்தப் பெட்ட கத்தில் வைக்க முடியும். இதற் கான குளிரூட்டி வசதியும் இந்தப் பெட்டகத்தில் பொருத்தப்பட்டுள் ளது. "போதை தொடர்பான மருந் துகள், இருமல் மருந்துகளை இந்தப் பெட்டகத்தில் அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. இந்த இடம் மிக அணுக்கமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனால் எவரும் மருந்துகளைத் தவறான வழியில் பயன்படுத்து வதைத் தவிர்க்க முடியும்," என சிங்ஹெல்த் பலதுறை மருந்தகத்தின் மருந்துக்கூடத் தலைவர் கிறிஸ்டினா லிம் தெரி வித்தார்.

இதற்கு முன்னதாக 'பில் பாக்ஸ்' பெட்டகத்திட்டம் மரின் பரேட் பலதுறை மருந்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொங்கோல் பலதுறை மருந் தகத்தில் அடுத்து இது அறி முகப்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடுமையாக நோய்வாய்ப்பட்டி ருக்கும் 70 விழுக்காட்டு நோயா ளிகள் ரத்த அழுத்தம், உடல் எடைக் குறியீடு (பிஎம்ஐ) போன்ற வற்றை பரிசோதித்துக் கொள்வ தற்காக, பிடோக் பலதுறை மருந் தகத்தில் நான்கு புதிய முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையை ஒரு நாளில் 100ல் இருந்து 130 நோயாளிகள் வரை பயன்படுத்துவதாக டாக்டர் பஹாடின் தெரிவித்தார்.