தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டில் நேற்றுக் காலை நிகழ்ந்த தீ விபத்தில் அந்த வீட்டில் வசித்த மூவர் காயமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 240ல் நேற்றுக் காலை 6.35 மணிக்கு நடந்த இந்தத் தீச்சம்பவத்தை குறும்புச் செயலாக போலிசார் வகைப் படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் நீரைப் பாய்ச்சி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீச்சம்பவம் நிகழ்ந்த வீட்டி லிருந்து 19க்கும் 31 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பெண்களைக் காப்பாற்றி, குடிமைத் தற்காப்புப் படையினர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். புகைமூட்டத்தினால் அவர்க ளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட் டதாகக் கூறப்பட்டது.
தெம்பனிஸ் அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீ, அந்த வீட்டின் உட்புறத்தையும் வெளிப் புறத்தையும் கடுமையாகச் சேதமடையச் செய்தது. படம்: வான் பாவ்

