துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் பிரபலமான வர்த்தகர் ஒருவரையும் மூன்று பயணி களையும் ஏற்றிக் கொண்டு ஒரு காரும் 'ஹைட்ரோகுளோரிக்' அமி லம் உள்ள 20 பீப்பாய்களை ஏந்திய கனரக லாரியும் பயணம் செய்து கொண்டிருந்தன. அப்போது இரு வாகனங்களும் மோதிக் கொண்டதில், மூவர் கடு மையாகவும் இருவர் இலேசாகவும் காயமடைந்தனர். லாரியில் உள்ள பீப்பாய்களில் ஐந்து, சாலையில் விழுந்ததால், அதிலிருந்து ரசாய னம் கசியத் தொடங்கியது. அப் போது ரசாயனத்திலிருந்து அமிலப் புகையும் அந்தப் பகுதியைச் சூழ்ந்துகொண்டது. மற்றொரு ரசாயனப் பீப்பாய் பாலத்தின் கீழ் உள்ள கடலில் விழுந்தது. ஆனால், அது உடையாமல் இருந் ததால் அதில் ரசாயனக் கசிவு இல்லை. இதுதான் நேற்றுக் காலை நடைபெற்ற தயார்நிலைப் பயிற்சி யின் பாவனை சம்பவம். உடனே, இரு நாடுகளைச் சேர்ந்த ரசாயன எதிர்ப்பு நடவடிக் கைக் குழுக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் படை யினர் உடனே துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்துக்கு விரைந் தனர். அங்கு சாலையில் பீப்பாய்களி லிருந்து வெளியேறிக் கொண்டி ருந்த ரசாயனத்தின் வீரியத்தைச் செயலிழக்கச் செய்ய இரு நாட்டுப் படையினரும் அரும்பாடுபட்டனர்.
துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் கனரக லாரியிலிருந்து விழுந்த பீப்பாயிலிருந்து கசியும் ரசாயனத்தால் அபாயம் விளையும் முன்னர் சிங்கப்பூர், மலேசியா அமைப்புகளின் ரசாயன எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் அதைத் தடுப்பது போன்ற பாவனைப் பயிற்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

