ஃபெர்னாண்டஸ்: எதிர்கால மாதிரி வடிவமாக சாங்கியின் முனையம் 4

ஃபெர்னாண்டஸ்: எதிர்கால மாதிரி வடிவமாக சாங்கியின் முனையம் 4

1 mins read

மலிவு கட்டண விமான சேவைகளுக்கான விமான நிலையத்தின் எதிர்கால மாதிரி வடிவமாக சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையம் திகழ்வதாக ஏர் ஏ‌ஷியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டோனி ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார். இம்மாதம் 7ஆம் தேதி முதல் புதிய முனையத்தில் சேவையைத் தொடங்கிய ஏர் ஏ‌ஷியா விமான சேவை, நான்காவது முனையத்தில் அதன் அனுபவத்தை வைத்து அச்சேவை இயங்கும் மற்ற விமான நிலையங்களில் இத்தகைய செயல்முறைகளை அமல்படுத்த முயற்சி எடுக்கும் என்றும் நேற்று சிங்கப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திரு ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

நான்காவது முனையத்தில் செயல்படுவது மின்னிலக்க விமான சேவையாக உருவாகும் எங்கள் பயணத்தில் ஓர் அங்கம் என்று கூறிய திரு ஃபெர்னாண்டஸ் மின்னிலக்க விமான நிலைய அனுபவத்தைப் பெற உலகத் தரம் வாய்ந்த சாங்கி விமான நிலையக் குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று குறிப்பிட்டார்.