ஆசியானின் வளர்ச்சி அடுத்த நிலையை அடைவதற்கு வலுவான தலைவர்கள் குழு தேவை என்று பேங்காக்கில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கௌரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங் கூறியுள்ளார். "50 வயதில் மனிதர்கள் தாங்கள் வயதான பருவத்தை அடைந்த உணர்வை பெறுவார்கள். ஆனால், ஓர் அமைப்பாக ஆசியான் அப்படி இருக்கக் கூடாது," என்று பேங்காக் போஸ்ட் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்த 'ஆசியான்@50: ஒரு மீள்பார்வை' என்ற கலந்துரையாடலில் திரு கோ கூறினார்.
மனிதர்களைப் போல வயதாகி மரணமடையாமல் இருப்பதற்கு ஆசியான் வலுவான நோக்கத் துடன் தம்மை புதுப்பித்துக் கொண்டு இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். அதுவே இக்கால, எதிர்கால ஆசியான் தலைவர்களின் பங்கு என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் பிரதமராக 1990ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை பதவி வகித்த திரு கோ, வலுவான ஒருங்கிணைந்த தலை மைத்துவம், அமைப்பின் மேம்பட்ட வளர்ச்சி, வட்டாரப் பிணைப்பு ஆகிய மூன்று அம்சங்களும் புதிய சவால்களுக்கு இடையில் ஆசியான் அடுத்த 50 ஆண்டு களுக்கு இவ்வட்டாரத்தில் செல் வாக்குடன் இருப்பதற்கு வழி வகுக்கும் என்று எடுத்துரைத்தார்.

