ரயில் சேவை மீளும் வரை இலவசப் பேருந்துகளில் பயணம் செய்யலாம்

ரயில் சேவை மீளும் வரை இலவசப் பேருந்துகளில் பயணம் செய்யலாம்

2 mins read

ஜூ கூன், துவாஸ் லிங்க் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட் டதைத் தொடர்ந்து போக்குவரத் துக்கு பயணிகள் மாற்று ஏற்பாடு களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்தில் நிகழ்ந்த ரயில் மோதல் தொடர்பான விசா ரணை தொடரும் வேளையில் துவாஸ் லிங்க் நிலையத்துக்கான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மோதல் சம்பவத்தில் 36 பேர் காய முற்றனர்.

துவாஸ் தொழிற்பேட்டை பகுதிக்கு ஜூ கூன் நிலையத் திலிருந்து இலவசப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித் தாளிடம் பேசிய பலரும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மாற்று பயண ஏற்பாடுகளைச் செய்துள்ள தாகக் குறிப்பிட்டனர். வழக்கமாக துவாஸ் லிங்க் நிலையத்தில் தம்மை யும் தம்முடன் வேலை செய்வோ ரையும் ஏற்றிச் செல்லும் வேன் இனிமேல் ஜூ கூன் நிலையத்திற்கு வரும் என்று சை யு டா, 36, என் னும் பொறியாளர் தெரிவித்தார். மேலும் நிலைமையை நன்கு புரிந்துகொண்ட தமது நிர்வாகம், ரயில் சேவை இடையூறு நிகழும் போது வேலை தொடங்கும் நேரத்தை அரை மணி நேரம் கூட்டி உள்ள தாக அவர் கூறினார்.

கிழக்கு-மேற்கு ரயில் தடம் கடந்த ஜூன் மாதம் 7.5 கிலோ மீட்டர் தூரம் நீட்டிக்கப்பட்டது. அதன் விளைவாக, 'துவாஸ் வெஸ்ட் எக்ஸ்டென்ஷன்' திறக்கப் பட்டது. இந்த நீட்டிப்புப் பாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கல் சர்க்கிள், துவாஸ் கிரசென்ட், துவாஸ் வெஸ்ட் ரோடு, துவாஸ் லிங்க் ஆகிய நான்கு நிலையங் களுக்கான ரயில் போக்குவரத்து நாளை மறுதினம் மீண்டும் தொடங் கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஜூ கூன், கல் சர்க்கிள் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பயணச் சேவை மீண்டும் தொடங்க ஒரு மாதம் வரை ஆகக்கூடும் என்று தெரிகிறது. எனவே நிலைமை மீளும் வரை இரு நிலையங்களுக்கு இடையிலான இலவசப் பேருந்து சேவை தொடரும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.