செங்காங் ஈஸ்ட் வேக்கு அருகில் உள்ள ஆங்கர்வேல் ரோடு சாலைச் சந்திப்பில் நேற்று பிற்பகல் 2.40 மணி அளவில் 38 வயது மாது ஒருவர் மீது பேருந்து மோதியது. நினைவிழந்த நிலையில் அந்த மாது கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சொல்லப் பட்டது. அந்த மாது சாலையைக் கடக்கும்போது விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் பாதசாரிகளுக்கான இடத்தில் சாலையைக் கடந்தாரா என்பது தெரியவில்லை. பேருந்துக்கு அடியில் அவர் சிக்கிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. அடிபட்ட பெண், அவரது குடும்பத்தாரை தொடர்புகொள்ள இயலவில்லை எனவும் போலிசாரின் விசாரணையில் உதவி வருவதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.
செங்காங்: பேருந்து மோதியதில் அடிபட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி
1 mins read

