ஓங்கியடித்து மரணம் விளைவித்தவருக்கு 10 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்

ஓங்கியடித்து மரணம் விளைவித்தவருக்கு 10 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்

1 mins read

போட் கீ அருகில் 2015ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்தைய நாள் நள்ளிரவு 15 பேர் சேர்ந்து கும்பலாகச் சென்று வன்முறையில் ஈடுபட்டபோது ஆடவர் ஒருவர் இறந்துபோன வழக்கில் முஹம்மது காலிஸ் ராம்லீ, 25, என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. சர்கியூட் ரோட்டில் மாது ஒருவருக்கு காலிஸின் நண்பர்கள் தொல்லை கொடுத்தபோது அமெரிக்கரான ஜான் டென்லி நெல்சன், 30, அவர்களை இடைமறித்தார். அப்போது ஜானின் தலையில் ஓங்கி குத்தியதாக குண்டர் கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான காலிஸ் ஒப்புக்கொண்டார். போதைப் பொருள் உட்கொண்டதையும் அவர் ஒப்புக் கொண்டார். தலையில் அடித்ததும் கீழே விழுந்த ஜான் பலத்த காயமடைந்தார். யுனிவர்சல் ஸ்டூடியோசில் பணிபுரிந்த ஜான், சென்ற ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று மாண்டுபோனார்.