எண்ணெய்சாரா உள்நாட்டு ஏற்றுமதி 20.9% உயர்ந்தது

எண்ணெய்சாரா உள்நாட்டு ஏற்றுமதி 20.9% உயர்ந்தது

1 mins read

சிங்கப்பூரின் ஏற்றுமதி கடந்த மாதம் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடு கையில் எண்ணெய்சாரா ஏற்றுமதி 20.9% உயர்ந்துள்ளது. உலகளா விய எதிர்பார்ப்பு வலுவடைந்து வருவதால் வர்த்தகம் உயர்ந்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் எதிர்பார்க்கப்பட்ட 10 விழுக்காட் டைத் தாண்டி எண்ணெய்சாரா ஏற்றுமதி அதிகளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எதிர்பாராத விதமாக கடந்த மாதம் ஏற்றுமதி 1.1 விழுக்காடு இறக்கம் கண்டதும் அக்டோபர் மாதம் ஏற்றுமதி விகிதம் கூடிய தற்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மின்னணுவியல் ஏற்றுமதியின் வீழ்ச்சி கடந்த மாதத்தின் மொத்த ஏற்றுமதியின் விகிதம் குறைவதற் கான காரணம் என்று கூறப்பட்டுள் ளது.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடு கையில் இந்த ஆண்டு மின் னணுவியல் மற்றும் அதைச் சாரா ஏற்றுமதி உயர்ந்து வந்துள்ளதே இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி விகிதம் கூடியதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணுவியல் ஏற்றுமதி சென்ற மாதம் 8 விழுக்காடு குறைந்து இந்த மாதம் 4.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதைச் சாரா ஏற்றுமதி சென்ற மாதம் 1.9 விழுக்காடு உயர்ந்த நிலையில் இந்த மாதம் 28.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.