சிங்கப்பூரின் தூய்மைக்குப் பொறுப் பேற்றுக்கொள்ளும் துப்புரவு உதவி யாளர்களின் ஊதியம் குறைவாக இருப்பது, அவர்களுக்குக் குறை வான மரியாதை அளிக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் 'லூ' எனப் படும் 'நம்மை நாமே கண்காணிப் போம்' விருது வழங்கும் நிகழ்ச்சி யில் சுட்டிக்காட்டப்பட்டது. "நமது கழிவறைகளைச் சுத்த மாக வைத்துக்கொள்வோரின் முகத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்," என்றார் வடகிழக்கு மாவட்ட மேயர் டெஸ்மண்ட் சூ. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட அவர், துப்புரவு ஊழியர்களுக்கு ஊதியம் குறைவு என்று குறிப்பிட்டார். துப்புரவு ஊழியர்களை மதிப்ப தற்கு நம் பிள்ளைகளுக்கு பள்ளி களிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சிங்கப்பூர் கழி வறைச் சங்கத்தின் தலைவரான திருவாட்டி டான் புவே ஹூன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை யிடம் தெரிவித்தார்.
நாளை உலக கழிவறை தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட ஒன்பதாவது விருது வழங்கும் நிகழ்ச்சியில் 42 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. "என் வாழ்நாளில் முதன் முறை யாக விருது பெறுகிறேன். எனது வேலையைப் பற்றி இன்று நான் பெருமையாக உணர்கிறேன்," என்று மரினா பே சேண்ட்ஸின் துப்புரவு உதவியாளார் சரஸ்பதி பாலகிஸ்ணா, 38, கூறினார். செந்தோசா கடற்கரை நிலையத் தில் அமைந்துள்ள கழிவறை இந்த ஆண்டின் மகிழ்ச்சியான கழிவறை யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பள்ளியில் உள்ள கழிவறை களின் தூய்மையை 'ஐபேடு'கள் மூலம் கண்காணித்த சிஹுவா தொடக்கப்பள்ளி மாணவர்களின் முயற்சிக்கு அவர்களுக்கு பிளாட் டினம் நட்சத்திர விருது வழங்கப் பட்டது.
சந்தை மற்றும் உணவு நிலையப் பிரிவில் விருது வென்ற 'அவர் தெம்பனிஸ் ஹப்' உணவங்காடி நிலையக் கழிவறைகளை வேறு இருவருடன் இணைந்து சுத்தம் செய்யும் 24 வயது ராஜசேகரன் கிருஷ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

