தண்டனை வழங்கப்படுவதற்கு பதில் கட்டாய சமூகச் சேவைக்கு உட்படுத்தப்படலாமா என்று இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இளையர்களில் சுமார் 50 விழுக் காட்டினர் சமூக ஊழியர்களால் மதிப்பிடப்பட்டுள்ளனர். ஆலோ சனை வழங்குதல் போன்ற சேவை கள் முதலில் அத்தகைய இளையர் களுக்கு வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு அந்த விகிதம் 40 விழுக்காடாக இருந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது. கடையிலிருந்து திருடுதல், சண்டையிடுதல் போன்ற சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப் படும் 19 வயது, அதற்கு குறை வான வயதுடையவர்களுக்கு 'டிரையேஜ்' என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறை நன்மை விளைவிக்கிறது.
தேவைப்படும் மற்ற சமுதாய சேவைகளுக்கு இளையர்களை உடனுக்குடன் பரிந்துரை செய்வ தற்கும் இந்தத் திட்டம் எளிதாக வழிவகுக்கிறது. அனைத்து போலிஸ் பிரிவுகளிலும் சென்ற ஆண்டு அறிமுகம் கண்ட இத்திட்டம், 2020ஆம் ஆண்டு வரை இயங்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 'டிரையேஜ்' எனும் வகைப் படுத்தப்படுதலுக்கான நேர்காணல் சென்ற ஆண்டு 1,089 முறை நடத்தப்பட்டதாகவும் அது குற்றம் புரிந்த 2,788 இளையர்களில் 40 விழுக்காடு என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் 686 நேர்காணல்கள் நடத்தப்பட்டதாகவும் இது கைது செய்யப்பட்ட 1,279 இளையர்களில் 50 விழுக்காடு என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. 'டிரையேஜ்' நேர்காணலுக்கு வரும் ஒவ்வொரு இளையரும் அவரைக் கவனித்துகொள்ளும் நபருடன் வந்து கலந்துகொள்வார் கள் என்று அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

