'மாணவர்களுக்கு உதவ சமூகத்தின் ஆதரவு உண்டு'

'மாணவர்களுக்கு உதவ சமூகத்தின் ஆதரவு உண்டு'

1 mins read
ccbfa76c-cc94-47b8-973c-efa03fd6c0fb
-

முஹம்மது ஃபைரோஸ்

இந்திய சமூகத்தில் வசதி குறைந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு உதவித் திட்டங்கள் இருந்த போதிலும் அவர்களை இந்தத் திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். அத்தகைய மாணவர்களுக்காக உதவிநிதித் திட்டங்கள் பல உள் ளன என்பது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்றும் ஒருசிலர் உதவி பெற முன்வருவ தில் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இந்த இடைவெளியைக் குறைக்க சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் வசதி குறைந்த, பின்தங் கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கும் தொகுதி களுக்கு சென்று அவர்களை உத வித் திட்டங்களுடன் இணைக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வசதி குறைந்த மாணவர்களைப் புதிய கல்வி ஆண்டுக்கு தயார் படுத்தும் நோக்கில் சிண்டா, நேற்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த 'பள்ளிக்குத் திரும்பும் விழா' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குமாரி இந்திராணி செய்தி யாளர்களிடம் இதனைத் தெரிவித் தார்.

சிண்டாவின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற 'பள்ளிக்குத் திரும்பும் விழா' நிகழ்ச்சியில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு பற்றுச்சீட்டு வழங்கினார் பிரதமர் அலுவலக அமைச்சரும் மனிதவள, உள்துறை அமைச்சுகளின் இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ (வலது). இடப்பக்கம் இருப்பவர் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கே. பரதன். படம்: சிண்டா