வெளிநாட்டு உறவுகளில் அசட்டை கூடாது

வெளிநாட்டு உறவுகளில் அசட்டை கூடாது

1 mins read

சிங்கப்பூரின் உள்நாட்டு விவாதங் களிலும் அரசியலிலும் வேறெந்த நாடும் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த ஒருபோதும் அனு மதிக்கக்கூடாது என்று மக்கள் செயல் கட்சி மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் நேற்று கூறினார். "நாம் பல நாடுகளுடன் நட்பாக இருந்தாலும், வெளி நாட்டுக் கட்டுப்பாடு அல்லது செல்வாக்கின்கீழ் நாம் என்றுமே தெரியாத்தனமாக வீழ்ந்துவிடக் கூடாது," என்றார் பிரதமர் லீ. இத்தகைய ஆதிக்கம் வெளிப் படையாக அல்லது மறைமுகமாக மேற்கொள்ளப்படலாம். இதனால் சிங்கப்பூர் பிளவுபட்டு பலவீனமாகி விடக்கூடும் என்றார் அவர்.

வெளிநாட்டுச் செல்வாக்கு பற்றிய ஆஸ்திரேலியாவின் கவலையைப் பிரதமர் எடுத்துக் காட்டாகக் கூறினார். ரஷ்யா சென்ற ஆண்டு ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் அமைதியாகவும் ரகசியமாகவும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த முயன்றதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதையும் அவர் சுட்டிக்காட்டினார். "இது நமக்கும் நடக்கக் கூடுமா? ஆமாம், நடக்கக்கூடும். ஆனால் இவ்வாறு நடக்காமல் நாம் தடுக்க வேண்டும்," என்றார் பிரதமர் லீ. தற்போது, அமெரிக்கா, சீனா, இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் நல்லு றவை நிலைநாட்டி வருகிறது. மற்ற பெரிய, சிறிய நாடுகளுட னான உறவில் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் இருக்கும். ஆனால், சிங்கப்பூரின் அடிப்படை அணுகு முறை மாறக்கூடாது.