3%க்கும் அதிக வளர்ச்சி

3%க்கும் அதிக வளர்ச்சி

2 mins read

சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டில் 3 விழுக்காட்டைத் தாண்டக்கூடும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக் கிறார். பொருளியல் இந்த ஆண் டில் 2% முதல் 3% வரை வளரும் என்று அரசாங்கம் முன்னதாகக் கணித்திருந்தது. ஜூரோங்கில் இருக்கும் பிக் பாக்ஸ்ஸில் அந்த மாநாடு நடந் தது. அதில் சுமார் 2,000 கட்சித் தொண்டர்களிடையே பிரதமர் லீ நேற்று பேசினார். பொருளியல் வளர்ச்சி அதி கரிக்கும் அதேவேளையில் பொரு ளியலைச் சீரமைக்கும் திட்டங் களை அரசாங்கம் முழுமூச்சாக நிறைவேற்றவேண்டிய தேவை இருக்கிறது என்றார் அவர். உலகப் பொருளியல் தலை தூக்குவதன் மூலம் சிங்கப்பூர் நன்மை அடைந்துள்ளது. சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் குறைவாக இருக்கிறது. ஊதியம் அதிகரித்து இருக்கிறது. இவற்றைவிட முக்கியமாக உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளது.

இருந்தாலும் இப்போதைய ஏறுமுகம் நிலையில்லாத ஒன்று. பொருளியல் வளர்ச்சியைக் கட்டிக்காக்கவேண்டும் என்றால் சிங்கப்பூர் தன்னுடைய பொருளிய லைச் சீரமைக்கும் திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். ஊழியர்கள் காலத்திற்கு ஏற்ப தேவையான தேர்ச்சிகளையும் ஆற்றல்களையும் பெறவேண்டும். தங்களை மேம்படுத்திக் கொள் வது எப்படி என்பதை அவர்கள் தெரிந்துகொண்டிருக்க வேண் டும். அதேவேளையில், அவர்கள் தங்கள் எதிர்காலத்திலும் வாழ் விலும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும்.

சிங்கப்பூர் நிறுவனங்களும் தொழில்நுட்பங்களைக் கைக் கொண்டு, மேம்பட்டு, உலகச் சந்தையில் போட்டிபோட வேண் டும் என்று திரு லீ குறிப்பிட்டார். எதிர்கால பொருளியல் குழுவின் பரிந்துரைகளை கட்டம் கட்டமாக எதிர்கால பொருளியல் மன்றம் அமல்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு லீ, இந்தப் பணி மிகமுக்கியமான பெரிய பணி என்று குறிப்பிட்டார். ஊழியர்களின் நலனைப் பேணுவதற்கு உதவும் மூன்று முக்கிய உத்திகளாக, தேர்ச்சி களை மேம்படுத்திக் கொள்வது, தேர்ச்சிக்கு ஏற்ற வேலைகளைப் பெறுவது, புதிய வேலைகளை உருவாக்குவது ஆகியவற்றை திரு லீ குறிப்பிட்டார். ஊழியர்களுக்கும் நிறுவனங் களுக்கும் அரசாங்கம் உதவும் என்றும் அவர் உறுதி கூறினார். ஒன்றாக இருந்து முயற்சிகளை மேற்கொண்டால் நமக்கு வெற்றி நிச்சயம் என்றார் திரு லீ.