சிங்கப்பூருக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் இடையிலான நம் பிக்கை எப்போதும் நீடித்திருக்கும் என்று அசட்டையுடன் இருந்து விடவோ அல்லது அதை வீணடித்து விடவோ கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார். பொதுத் தேர்தலுக்கு இரண்டு முதல் மூன்றாண்டுகளே உள்ளன. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று கட்சித் தொண்டர் களுக்கு அவர் அறிவுறுத்தினார். மக்கள் செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில் நேற்று திரு லீ உரையாற்றினார்.
"நமக்கு வலுவான ஆதரவு கிடைக்கவேண்டுமென்றால், ஒவ் வொரு கட்சித் தொண்டரும் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்," என்று மசெகவின் தலைமைச் செயலாளாலருமான திரு லீ கூறினார். "இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த, நமது அரசியல் சரியான பாதையில் செல்ல வேண்டும். மக்கள் மசெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். முக்கிய மாக அவர்களுக்கு கட்சி மீது நம்பிக்கை இருக்க வேண்டும். கட்சி அவர்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளது. அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தப் பாடு படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும்," என்றார் அவர். மசெகவுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த சிரத்தையுடன் கட்டி வளர்க்கப் பட்டுள்ளது என்று திரு லீ கூறினார்.
மக்கள் செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில் தமது மனைவி ஹோ சிங், கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்க வாதிகளுடன் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

