ஜூ கூன் எம்ஆர்டி ரயில் நிலை யத்தில் நிகழ்ந்த ரயில் மோதலைப் போன்ற எம்ஆர்டி சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். குறைகள் எல்லாவற்றையும் சரிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் அடிப்படை வசதிகளை, குறிப்பாக பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம் படுத்துவது முக்கியமான முதல் காரியம் என்று பிரதமர் தெரி வித்தார். பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் பயனீட்டாளர் களின் நம்பகத்தன்மை சிறந்த நிலைக்கு மேம்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரான திரு லீ, நேற்று கட்சியின் வருடாந்திர விருது வழங்கும் விழா மற்றும் மாநாட்டில் உரையாற்றினார். பீஷான் எம்ஆர்டி நிலையத் திற்கு அருகே சென்ற மாதம் சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்பட்டதையும் சில நாட்களுக்கு முன் ஜூ கூன் எம்ஆர்டி நிலை யத்தின் ரயில் மோதல் சம்பவத் தையும் அவர் சுட்டிக்காட்டினார். "இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடாது. ஆனால் அவை நிகழ்ந்துவிட்டன. அவற்றி லிருந்து சரியான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கான மூல காரணங்களைக் கண்டறிய வேண்டும். எல்லாவற்றையும் சரிப்படுத்த வேண்டும்," என்றார் திரு லீ.
அதிகாரிகள் பொதுப் போக்கு வரத்து கட்டமைப்பை விரிவுபடுத்துவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இதர பெரிய சமூக மற்றும் அடிப்படை வசதி முதலீடுகளையும் அவர்கள் செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

