காமன்வெல்த்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று இருவர் வெட்டப் பட்ட சம்பவத்தில் 35 வயது ஆடவர் ஒருவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். காமன்வெல்த் டிரைவ் புளோக் 50க்கு அருகே பிற்பகல் 2.00 மணியளவில் இந்த வெட்டு சம்பவம் நடைபெற்றது என்று ஷின் மின் டெய்லி கூறிற்று. மின் தூக்கியிலிருந்து 20 மீட்டர் தொலைவுக்கு ரத்த கறை காணப்பட்டது. பிற்பகல் 2.52 மணியளவில் ஆபத்தான ஆயுதம் மூலம் ஒருவர் தாக்குவதாகத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர். இதையடுத்து சம்பவ இடத் துக்கு வந்த காவல்துறையினர் 50,66 வயதுகளில் இருந்த இரு வரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் முகத் திலும் கழுத்திலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று ஷின் மின் டெய்லி குறிப்பிட்டது. இருப்பினும் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காமன்வெல்த் டிரைவில் இருவருக்கு வெட்டு
1 mins read

