அரசாங்க முதலீட்டு நிறுவனமான 'ஜிஐசி', மெல்பர்னில் உள்ள புதிய புத்தாக்க வட்டாரத்தின் பெருமளவு பங்கை கைப்பற்றியுள்ளது. இந்த வட்டாரத்தில் ஜிஐசி உட்பட யுனிவர்சிட்டி ஆஃப் மெல்பர்ன், லெண்ட்லீஸ், அர்பானெஸ்ட் ஆகியவை முதலீடு செய்துள்ளன என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜிஐசி குறிப்பிட்டது. மெல்பர்ன் மத்திய வர்த்தக வட்டாரத்துக்குத் தெற்கே பல்கலைக் கழக வளாகத்துக்கு அருகே புதிய புத்தாக்க வட்டாரம் சகல அடிப்படை வசதிகளுடன் இடம்பெற்றுள்ளது.
மெல்பர்ன் புதிய புத்தாக்க வட்டாரத்தில் 'ஜிஐசி' முதலீடு
1 mins read

