மின்தூக்கிக் கோளாறுகள் ஏற் பட்ட ஓராண்டுக்குப் பிறகு மின் தூக்கிகளை பழுதின்றி பராமரிப் பதில் அனைத்து நகர மன்றங் களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்று நேற்று வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையில் தெரி விக்கப்பட்டது. ஆனால் அல்ஜுனிட்-ஹவ் காங் நகர மன்றம், அங் மோ கியோ நகர மன்றம் ஆகிய இரு நகர மன்றங்களும் ஆளுமையில் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட வில்லை என்று அது கூறியது. 2016 நிதியாண்டில் நகர மன்றங்களின் நிர்வாகம் பற்றிய அறிக்கையை தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று வெளியிட்டது.
மின்தூக்கி செயல்பாட்டில் பச்சை நிற தரக்குறியீடு பெறு வதற்கு பத்து மின்தூக்கிகள் வீதம் மாதம் இரண்டு மின் தூக்கிகளுக்கும் குறைவான செயலிழந்த சம்பவங்கள் நடந் திருக்க வேண்டும். நூறு மின் தூக்கிகள் வீதம் இரண்டுக்கும் குறைவான தானியக்க மீட்பு சாதனம் செயல்படாமல் இருந் திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் நகர மன்றங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அமைச்சின் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் ஐந்து முக்கிய கூறுகளில் கவனம் செலுத்தப்படு கின்றன. குடியிருப்புப் பேட்டை களின் தூய்மை, நிர்வாகம், மின் தூக்கிகளின் செயல்பாடு, சேவை மற்றும் பராமரிப்புக் கட்டணம், ஆளுமை ஆகியவை அந்த ஐந்து அடிப்படை அம்சங்கள்.
மின்தூக்கிகளைப் பராமரிப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நகர மன்றங்களுக்கான ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

