பெட்ரா பிராங்கா தீவு விவகாரத்தில் மலேசியாவின் கோரிக்கையை பிரதமர் லீ குறைகூறுகிறார்: அம்னோ இளையர் பிரிவு தலைவர்

பெட்ரா பிராங்கா தீவு விவகாரத்தில் மலேசியாவின் கோரிக்கையை பிரதமர் லீ குறைகூறுகிறார்: அம்னோ இளையர் பிரிவு தலைவர்

1 mins read

பெட்ரா பிராங்கா தீவுக்கான உரிமையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற மலேசியாவின் கோரிக்கையை பிரதமர் லீ சியன் லூங் சிறுமைப்படுத்துகிறார் என்று மலேசியாவை ஆளும் அம்னோ கட்சியின் இளையர் பிரிவு தலை வர் கைரி ஜமாலுதீன் குறைகூறி யுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை பேசிய பிரதமர் லீ சியன் லூங், மலேசியாவின் கோரிக்கை அங்கு அடுத்த மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நோக்கமுடைய தாக இருக்கலாம் என்று கூறியிருந் தார். இதற்குக் கண்டனம் தெரி வித்த கைரி ஜமாலுதீன், சிங்கப் பூருக்கு வடகிழக்கே உள்ள பிரச் சினைக்குரிய தீவு விவகாரத்தில் புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மலேசியாவில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு முன்பு நாடாளு மன்றம் கலைக்கப்பட வேண்டும். ஆனால் இன்னமும் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை.