முன்னாள் அமைச்சர் டியோ செர் லக் புதிய தொழிலைத் தொடங்கி தமது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் நிதிக்கு மற்றவர்களை நம்பியிராமல் வேலைகளை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரு டியோ தமது வாழ்க்கையில் 15 ஆண்டுகளை தனியார் துறையிலும் அரசியலில் 11 ஆண்டுகளையும் கழித்துள்ளார். தற்போது பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டியோ செர் லக், வயது 49, தொழில் முனைவராகும் தமது நீண்டகால எண்ணத்தை பூர்த்தி செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் மனிதவள துணை அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். அந்தக் காலகட்டத்தில் கல்வி, விளையாட்டு முதல் நிதித் தொழில்நுட்பம் வரை பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள அனுபவம் அவருக்கு உண்டு.
முன்னாள் அமைச்சரின் புதிய அத்தியாயம்
1 mins read

