பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றம்: முன்னாள் ராணுவ அதிகாரிக்குச் சிறை

பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றம்: முன்னாள் ராணுவ அதிகாரிக்குச் சிறை

2 mins read
6aabdcd7-fe7b-44e1-ba49-ae38be92c011
-

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பணிப்பெண் துன்புறுத் தல் வழக்கு ஒன்றில் முன்னாள் ராணுவ அதிகாரிக்கு நான்கு மாதம், மூன்று வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கே.ராஜகுமாரி, 57, என்னும் அந்தப் பெண் அதிகாரியின் வீட் டில் கடந்த 20-12ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த சற்குணம் ஜீவா என்னும் பணிப்பெண் வேலைக்குச் சேர்ந்தார். எட்டா வது வரை மட்டுமே படித்திருந் ததால் ஜீவாவுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அந்த ஆண்டு பிப்ரவரி முதல் பணிப்பெண்ணுக்குப் பிரச் சினை தொடங்கியது. முதலில் வார்த்தை துன்புறுத்தலுக்கும் தொடர்ந்து உடல் ரீதியான துன் புறுத்தலுக்கும் அப்பெண் ஆளா னதாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.

கடந்த 2012 மார்ச் 3ஆம் தேதி இரவு தமது சீருடையை ஜீவா சரியாக இஸ்திரி போடவில் லை என்று கூறி அந்தப் பெண் ணை 'பிளாஸ்டிக் ஹேங்கரால்' தாக்கியிருக்கிறார். 'ஹேங்கர்' உடையும் வரை அடி தொடர்ந்தது. முதல் நாள் சமைத்த பிரியாணியைச் சுட வைக்க உத்தரவிட்டபோது அந்த பிரியாணி கெட்டுப்போயிருந் ததைக் கண்ட ராஜகுமாரி, அந்தக் காரணத்துக்காக பணிப் பெண்ணைத் திட்டியதோடு அவ ரது கன்னத்தில் அறைந்திருக்கி றார். தொடர்ந்து தலைமுடியைப் பிடித்து இழுத்து சன்னல் கம்பி களில் மோதியதால் ஜீவா கீழே விழுந்துவிட்டார். அப்போது அவரது இடுப்பில் உதைத்திருக் கிறார். தம்மால் கொடுமை பொறுக்க இயலாது என்றும் முகவரிடம் திருப்பி அனுப்பிவிடு மாறும் ஜீவா கேட்டுக்கொண் டதற்கு அவ்வாறு செய்ய இய லாது என்று ராஜகுமாரி மறுத் திருக்கிறார்.

பின்னர் ஒருவழியாக தமக்கு நேர்ந்தவற்றை அண்டை வீட்டு பணிப்பெண்ணிடம் ஜீவா கூறி இருக்கிறார். அப்பணிப்பெண் அதனை போலிசிடம் தெரிவித் துள்ளார். போலிசார் வந்து விசாரித்தபோது தம்மை மன் னித்துவிடுமாறும் இனிமேல் அதுபோல் செய்யமாட்டேன் என்றும் ஜீவாவிடம் தமிழில் கேட்டிருக்கிறார். தமிழ் வார்த்தைகளை அதி காரியால் புரிந்துகொள்ள இய லாது என்று ராஜகுமாரி தவ றாகக் கருதிவிட்டார். மொழி யைப் புரிந்துகொண்டு அதிகாரி விசாரணயைத் தொடர்ந்தபோது ஜீவாவைத் தாக்கிய உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். ராஜ குமாரி ராணுவச் சேவையில் 35 ஆண்டுகாலம் பணிபுரிந்த பின் னர் ஓய்வுபெற்றிருந்தார்.

கே.ராஜகுமாரி, 57. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்