உணவங்காடி நிலையங்களிலுள்ள கடைகளில் கைபேசி வழி தொகை செலுத்தும் முறையை சிங்கப்பூரில் உள்ள ஏழு முன்னணி வங்கி களின் வாடிக்கையாளர்கள் விரை வில் பயன்படுத்துவார்கள். உணவங்காடி நிலையக் கடை களில் வாங்கும் சாப்பாடு உள் ளிட்ட பொருட்களுக்கு நெட்ஸ் QR குறியீட்டு முறையைப் பயன் படுத்தி கைபேசியின் இ=வாலெட் மூலம் பணம் செலுத்தும் கட்ட மைப்பில் தற்போது மூன்று வங்கி களே உள்ளன. டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய வங்கிகளே அவை.
ரொக்கமற்ற இந்தப் புதிய பணப் பரிவர்த்தனை முறை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் கண் டதிலிருந்து 20 உணவங்காடி நிலையங்களில் உள்ள 600க்கு மேற்பட்ட கடைகளில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. தஞ்சோங் பகார், நியோ கிரெ சென்ட், யீஷுன் பார்க், ஸியோன் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள உணவங்காடி நிலையங்கள் அவை. மேலும், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரி, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, தெமா செக் பலதுறைத் தொழிற்கல்லூரி, நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள உணவகங்களிலும் தற்போது இ=வாலெட் ரொக்கமற்ற முறை யில் பணம் செலுத்துவது பயன் பாட்டில் உள்ளது.

