நீரிழிவு பற்றிய யோசனைகளை திரட்ட குடிமக்கள் நடுவர் குழு

நீரிழிவு பற்றிய யோசனைகளை திரட்ட குடிமக்கள் நடுவர் குழு

1 mins read
7f87e812-7888-40b2-b207-018629b649c3
-

நீரிழிவை ஒடுக்குவதற்கான யோச னைகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்ட, தேசிய குடிமக்கள் நடுவர் குழுவை சுகாதார அமைச்சு முதல்முறையாக அமைத்துள்ளது. வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்த 75 பேர் குழு வில் இடம்பெறுகின்றனர். நீரிழிவைத் தடுக்கவும் கட்டுப் படுத்தவும் துணை புரியும் யோச னைகளை வகுப்பது அவர்களின் பணி. குழு உறுப்பினர்கள் அனைவ ருமே தொண்டூழியர்கள். நீரிழிவால் பாதிக்கப்பட்டோர், மருத்துவர்கள், நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட எவரையும் அறியாதவர்கள் எனப் பலதரப்பட் டோர் அவர்களில் உள்ளடங்குவர். சிலருக்கு அமைச்சு அழைப்பு விடுத்தது.

மற்றவர்கள் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறி விப்பைத் தொடர்ந்து பதிவு செய் தனர். பொதுமக்களை ஈடுபடுத்தும் சுகாதாரம் சார்ந்த முனைப்பு நடு வர் குழுவுடன் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என அமைச்சு குறிப்பிட்டது. குழுவுக்கு ஆள் சேர்க்க பல துறை மருந்தகங்கள், நிபுணத்துவ மருந்தகங்கள் போன்ற பொது, தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களோடும் அமைச்சு கூட்டாகச் செயல்பட்டது.

தேசிய நீரிழிவு தடுப்பு, பராமரிப்புப் பணிக்குழு பரிந்துரைகளைப் பரிசீலித்து அமலாக்கும் என அமைச்சு தெரிவித்தது. படம்: பிஸ்னஸ் டைம்ஸ்