நன்கொடைக்கு கிடைக்கும் நுழைவுச்சீட்டுகள்

நன்கொடைக்கு கிடைக்கும் நுழைவுச்சீட்டுகள்

1 mins read
3820929c-7965-4189-9de0-87b60522f3a4
-

சாதுர்யமான நகைச்சுவைப் பேச் சால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர், தமது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஐம்பது 'விஐபி' (முக்கிய பிரமுகர்) நுழைவுச்சீட்டு களை இலவசமாக வழங்கவிருக் கிறார். மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் கவலைகளையும் எரிச் சல்களையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தும் குமார், 'கிவிங் வீக்' (கொடை வாரம்) என்ற தேசிய இயக்கத்துடன் இணைந்து தமது ஐம்பதாவது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடவுள்ளார். பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரை 'கெபிட் டல்' அரங்கில் 'குமார் 50' என்ற நகைச்சுவை மேடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள குமார், தமது பிறப்பு, வளர்ப்பு ஆகியவற்றுடன் ஐம்பது ஆண்டுகளில் பயணம் செய்த மேடை நிகழ்ச்சிகளின் அனுபவங்களையும் நகைச்சுவை யுடன் கூற வருகிறார். 'கிவிங் வீக்' இயக்கத்தை ஆதரிக்கும் இவர், 'பியாண்ட் சோஷல் சர்வீசஸ்' என்ற அமைப்புக்கு குறைந்தது $10 நிதி வழங்கும் தனிநபர்களில் ஐம்பது பேருக்குத் தமது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான 'விஐபி' நுழைவுச்சீட்டுகளை இலவசமாக வழங்கவிருக்கிறார்.

தமது ஐம்பதாவது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் உள்ளூர் நகைச்சுவை கலைஞர் குமார், எதிர்வரும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு மும்முரமாக தயா ராகி வருகிறார். படம்: ட்ரீம் அகாடமி.