சிங்கப்பூரில் நேற்றோடு முடிவடைந்த 27வது ஆசியான் ராணுவ குறிசுடும் போட்டிகளில் அந்தந்த நாடுகள், போட்டித்தன்மையுடன் குறிசுடுவதில் தங்கள் திறனை வெளிப்படுத்தியிருந்தாலும் அடிப்படையில் ஆசியான் நாடுகளின் நட்புணர்வு மேலோங்கி இருந் தது என்று சிங்கப்பூர் ராணுவப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் மெல்வின் ஓங் தெரிவித்தார். 'கார்பைன்', நீள்துப்பாக்கி, இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி (ஆண்கள், பெண்கள்) என ஐந்து பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அவற்றில் 15 விருதுகளில் ஒன்பதைக் கைப்பற்றியது இந்தோனீ சிய ராணுவக் குழு. அடுத்த ஆண்டு போட்டிகளை மலேசியா ஏற்று நடத்தும்.
படத்தில் சிங்கப்பூர் ராணுவத்தின் தற்காப்புக் கலைக் காட்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

