இணைய வர்த்தக வரியை பரவலாக்க பரிசீலனை

இணைய வர்த்தக வரியை பரவலாக்க பரிசீலனை

1 mins read
c102b9ff-e4cb-4682-86c0-edee0147bb0e
-

சிங்கப்பூர் தன்னுடைய வரி ஆதார கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் இணைய வர்த்தகத் திற்கு உரிய வரியைப் பரவலாக்கு வது பற்றி ஆராய்ந்து வருகிறது. புளூம்பர்க் நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் அளித்த ஒரு பேட்டியில் சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா இவ்வாறு குறிப்பிட்டு இருக் கிறார். சிங்கப்பூர் தன்னுடைய வரி ஆதார அடிப்படைக் கட்டமைப்பை மேலும் பன்மயப்படுத்த உதவக் கூடிய ஒரு துறை இணைய வர்த் தகத் துறை என்று அமைச்சர் குறிப்பிட்டார். இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் பொருட்களை வாங்கும் விதம் மிகவும் வேறுபட்ட முறையில் இருக்கும். அப்போது இணையம் வழி பொருட்களை வாங்கும் நடை முறை முக்கியமானதாக ஆகும். ஆகையால் வரி விதிப்பு அடிப் படைக் கட்டமைப்பில் இணையம் வழி வர்த்தகத் துறையை உள்ள டக்கவில்லை என்றால் ஏராளமான ஓட்டைகள் விழுந்துவிடும் என்று அமைச்சர் பேட்டியில் தெரிவித்தார்.

சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா. படம்: சாவ் பாவ்