அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூரில் 'மைரிபப்ளிக்' கைபேசி சேவை

அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூரில் 'மைரிபப்ளிக்' கைபேசி சேவை

1 mins read
c861e62d-c925-409c-b918-2e468926a438
-

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மற்றொரு கைபேசிச் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத் திக்கொள்ளலாம். உள்ளூர் கண்ணாடிஇழை அகன்ற அலைவரிசை சேவை வழங்கும் நிறுவனமான 'மைரிபப் ளிக்' சிங்கப்பூரில் இயங்கும் மூன்று தொலைத்தொடர்பு நிறுவ னங்களில் ஒன்றுடன் இணைந்து கைபேசி சேவைகள் வழங்குவதற் கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து பேசும் நேரத்தை தனது நிறுவனம் வாங்கி, அதை தனது வாடிக்கையா ளர்களுக்கு வழங்கும் என்று கூறிய மைரிபப்ளிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு மால்கம் ரோட்ரிகேஸ், எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத் துடன் அது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பதைத் தெரி விக்க மறுத்துவிட்டார். சிங்கப்பூரின் நான்காவது தொலைத்தொடர்பு நிறுவனத்துக் கான போட்டியில் மைரிபப்ளிக் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா வின் டிபிஜி டெலிகாம் நிறுவனத் திடம் தோற்றது. கோப்புப்படம்: பிசினஸ் டைம்ஸ்