பொங்கோல் பலதுறை மருந்தகம் இம்மாதம் 24ஆம் தேதி திறக்கப்படும்

பொங்கோல் பலதுறை மருந்தகம் இம்மாதம் 24ஆம் தேதி திறக்கப்படும்

1 mins read

பொங்கோலில் புதிதாக நான்கு மாடி பலதுறை மருந்தகம் அப்பகுதி மக்களுக்காகச் செயல்பட இருக்கிறது. சிங் ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் குழுமத்தின் ஓர் அங்கமான பொங்கோல் பலதுறை மருந்தகம் இம்மாதம் 24ஆம் தேதி 'ஓயெசிஸ்' எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் திறக்கப்படவுள்ளது. இது சிங்கப்பூரின் 19வது பலதுறை மருந்தகமாகவும் சிங்ஹெல்த்தின் எட்டாவது பலதுறை மருந்தகமாகவும் செயல்படும். வெளிநோயாளி மருத்துவப் பராமரிப்பு, நாள்பட்ட மற்றும் கடுமையான நோய்களுக்கான பிரிவு, பெண்களுக்கான சுகாதாரச் சேவைகள், குழந்தைகள் சுகாதாரச் சேவைகள், நோய்த்தடுப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, எக்ஸ்ரே, இயன் மருத்துவம், பாதக் கோளாறு களுக்கான சிகிச்சை போன்ற அனைத்து சேவைகளும் கிடைக்கும் ஒரே இடமாக இந்தப் பலதுறை மருந்தகம் திகழும். இங்கு சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு சரிவுப்பாதைகள், மின்தூக்கிகள் ஆகிய வசதிகளும் உள்ளன. செங்காங் பொது மற்றும் சமூக மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், இதர சமூக சேவை அமைப்புகளு டன் பொங்கோல் பலதுறை மருந்தகம் அணுக்கமாகச் செயல்படும்.