சிங்கப்பூரில் சில பகுதிகளில் நேற்று மாலை கடும் மழை பெய்த தன் காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அலெக்சாண்டிரா ரோட் டிலும் தோம்லின்சன் ரோட்டிலும் வெள்ளம் ஏற்பட்டதாக டுவிட்டரில் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. அலெக்சாண்டிரா ரோட்டில் கிளாரன்ஸ் லேனை அடுத்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக மாலை 5.34 மணிக்கு ஆணையம் தெரிவித்தது. தோம்லின்சன் ரோட்டில் கஸ் கேடன் ரோட்டுடனான சந்திப் பிற்கு அருகே வெள்ளம் ஏற்பட்ட தாக ஐந்து நிமிடம் கழித்து அது டுவிட்டரில் குறிப்பிட்டது. பிறகு தோம்லின்சன் ரோட்டில் வெள்ள நீர் வடிந்துவிட்டதாகவும் அந்தப் பகுதியில் போக்குவரத்து சாத்தியம் என்றும் பத்து நிமிடங்கள் கழித்து மாலை 5.49 மணிக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் தெரி வித்தது.
அலெக்சாண்டிரா, தோம்லின்சன் சாலைகளில் நேற்று மாலையில் திடீர் வெள்ளம்
1 mins read

