லோவர் டெல்டா ரோட்டில் நேற்று பெரிய மரக்கிளை ஒன்று விழுந்ததால் அந்தச் சாலையின் இரண்டு தடங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அந்தச் சாலையில் ஒரு பகுதி வாகனப் போக்குவரத்துக்கு 1 மணி நேரம் மூடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. மரக்கிளை விழுந்தது பற்றி நேற்று பிற்பகல் 2.17 மணிக்கு படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மருத்துவ வாகனம் ஒன்று அங்கு அனுப்பப்பட்டது. ஆனால் எவருக்கும் மருத்துவ உதவி தேவைப்படவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மரக்கிளை விழுந்து; சாலைப்பகுதி மூடல்
1 mins read
-

